News

காணாமல்போனோர் விவகாரம்; விரைந்து நடவடிக்‍கை எடுக்கவும்.

காணாமல் போனோரை உயிருடன் மீட்டுத்தர முடியாவிடின் அவர்களுக்கு என்ன நடந்தது எனும் உண்மையையேனும் அரசாங்கம் வெளியிட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதற்கிணங்க காணாமல் போனோர் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இயங்கும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்தே குறித்த இந்த ஆர்ப்பாடத்தை இன்று கொழும்பு, விகாரமாதேவி பூங்காவிற்கு அண்மையில் முன்னெடுத்திருந்தது.

அத்துடன் காணாமல் போன தமது உறவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டம் 500 நாட்களை கடந்துள்ள போதும் அரசாங்கம் எவ்வித தீர்வினையும் முன்வைக்கவில்லை. மேலும் சரணடைந்தவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியிப்படுத்தவில்லை.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்த போதும் தற்போதுவரை எவ்வித முன்னேற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top