News

காதலியை துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை டாய்லெட்டில் ஃப்ளஷ் செய்த காதலன்!!

ரஷ்யாவில் காய்கறி நறுக்க பயன்படும் கத்தியால் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி அவளது உள்ளுறுப்புகளை டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்த கோர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Vera Nurbaeva (23) இரவு விடுதியில் நடனமாடும் ஒரு அழகிய பெண். இண்டர்நெட்டில் Sergey Kovalchuk (28) என்னும் வங்கி அலுவலரைச் சந்தித்த ஒரு குழந்தைக்கு தாயான Nurbaevaவுக்கு அவர் மீது காதல் வந்திருக்கிறது. இருவரும் சேர்ந்து ஒன்றாக சுற்றியிருக்கிறார்கள், புத்தாண்டை சேர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது மொபைல் போனை திருடிவிட்டதாக Sergey மீது குற்றம் சுமத்தியிருக்கிறார் Nurbaeva. இதனால் ஆத்திரமுற்ற Sergey, Nurbaevaவைக் கழுத்தை நெறித்து கொன்று விட்டார். பின்னர் நடந்ததுதான் கோரம், Nurbaevaவின் ஒவ்வொறு உறுப்பாக துண்டு துண்டாக வெட்டிய Sergey, அவைகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து மாஸ்கோவிலுள்ள ஒரு குளத்தில் கொண்டு போட்டிருக்கிறார். இறுதியாக Nurbaevaவின் குடல் முதலான உள்ளுறுப்புகளை டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்து விட்டார் Sergey. பின்னர் பொலிசாரிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட Sergeyக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top