Canada

குகைக்குள் சிக்கியவர்களை மீட்கச் சென்ற கனடா வீரரின் தாயின் உணர்வுகள் !!

தாய்லாந்து குகைக்குள் சிக்கி மீண்டவர்களின் மகிழ்ச்சி ஒரு பக்கம், அவர்களது குடும்பத்தினரின் ஆனந்தம் ஒரு பக்கம், இந்த நிலையில் குகைக்குள் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புக் குழுவினரின் அன்புக்குரியவர்களின் மன நிலைமை எப்படி இருந்தது? பகிர்ந்து கொள்கிறார்கள் எரிக் என்ற ஒரு கனடா வீரரின் குடும்பத்தார்.

நான் குகைக்குள் சிக்கியவர்களை மீட்கப் போகிறேன் என்று அவன் என்னிடம் கூறியபோது எனக்கு பதற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறும் அந்த தாய், ஏனென்றால் அந்த நேரத்தில் அங்கு என்ன நடக்கிறது என்பது நமக்கு அவ்வளவாக தெரியவில்லை, அப்போது இவ்வளவு செய்திகளும் வெளியாகவில்லை இல்லையா என்கிறார்.

அவன் பொதுவாக அதிகம் ரிஸ்க் உள்ள அதையும் செய்பவனில்லை, அதனால் நான் ஆரம்பத்தில் கவலைப்படவில்லை என்ற அவர், ஆரம்பத்தில் மட்டும் என்று அழுந்தக் கூறிவிட்டு சிரிக்கிறார்.

சில நாட்களுக்கு என்னை நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது, வேண்டுமானால் இமெயில் அனுப்புங்கள் என்றான் அவன், ஆனால் அவன் கூறியது என்னை திருதிப்படுத்தவில்லை.
நான் அவனிடம் பல கேள்விகளை கேட்க விரும்பினேன், சரி பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

அதன் பின்பு உலகத்திலுள்ள மற்றவர்கள் போலவே எப்போதும் TVயின் முன்பாகவே உட்கார்ந்து என்ன நடக்கிறது என்று கவனித்துக் கொண்டிருந்தோம்.
அதன் பிறகுதான் அங்கு என்ன நடக்கிறது, எரிக் எவ்வளவு பிஸியாக இருக்கிறான் என்பது போன்ற விடயங்கள் புரிய ஆரம்பித்தது.

அதற்கு மேல் அவன் என செய்கிறான் என்றெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை, அவன் ஒரு காரியம் மட்டும் சொன்னான், அம்மா அது காபிக்குள் நீச்சலடிப்பது போல் இருக்கிறது, எதுவுமே தெரியவில்லை என்றான். அது போன்ற ஒரு சூழலில் இதுவரை அவன் நீந்தியதில்லை, அது ஒரு வித்தியாசமான அனுபவம், பல்வேறு வகை அழுத்தங்கள்.

ஒரு விடயம் அவன் கூறினான், அம்மா அங்குள்ளவர்கள் அளிக்கும் ஆதரவு அமோகமாக இருக்கிறது, என்று கூறினான் அவன்.வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நேரம் என்பதால் சில நேரங்களில் இரவெல்லாம் விழித்திருந்து நாங்கள் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு சிறுவனை மீட்டார்கள், சிறிது நேரத்தில் இன்னொரு சிறுவன், நாங்கள் எண்ணிக் கொண்டே இருந்தோம்.கடைசியாக அந்த பயிற்சியாளர் வந்தார், அவர் அருமையான மனிதர், அவ்வளவு சிறுவர்களையும் உயிரோடு பாதுகாத்து வைத்திருந்தது பெரிய விடயம், நான் அவரை ஒரு நாள் சந்திக்க விரும்புகிறேன்.

அவனிடம் நிறைய பேச வேண்டும், இப்போது ஒன்று மட்டும் சொல்கிறேன், அவனை நாங்கள் மிகவும் மிஸ் பண்ணுகிறோம், அவனை மீண்டும் எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம்.

நமக்குத் தெரியாத பல கஷ்டங்களை அவன் சந்தித்திருக்கலாம், அதை அவனிடம் கேட்க வேண்டும் என்று அவர் கூறவும், குறுக்கிட்ட எரிக்கின் சகோதரர் அவன் எதையும் பெருமைக்கென்று சொல்லுகிற ஆள் இல்லை அதனால் அவன் நடந்ததை சொல்லுவானா என்று கூட தெரியாது, அவனால் எங்களுக்கு மிகவும் பெருமை என்றார்.

நிச்சயமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு வீரரின் குடும்பத்தாரும் இவ்வாறுதான் உணர்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top