News

சவுதியில் இளவரசி மெர்க்கலின் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை !

சவுதி அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி மேகன் மெர்க்கலின் தோழியும், பெண்ணுரிமை ஆர்வலருமான Loujain Al-Hathloul சிறை தண்டனையை எதிர் நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமைக்காக போராடிய முக்கியமான 9 பெண்களில் 28 வயது Loujain Al-Hathloul என்பவரும் ஒருவர். அரசுக்கு எதிராக மக்களை தூண்டியவர்கள் எனக் கூறி கடந்த மே மாதம் இவர்கள் 9 பேரும் சவுதி அரசால் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் சவுதி அரசாங்கம் அதன் பின்னர் பெண்களுக்கு தனையாக வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கியது. இருப்பினும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கைதான 9 பெண்கள் மீதும் தற்போது ராஜதுரோக குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் 9 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் Loujain Al-Hathloul என்பவர் கனேடிய பிரதமர் ட்ரூடியோ மற்றும் மேகன் மெர்க்கலுடன் இணைந்து புகைப்பட்ட தொகுப்பு ஒன்றை மேற்கொண்டவர். அந்த நிகழ்வுக்கு பின்னர் மேகன் மெர்க்கலும் Loujain Al-Hathloul என்பவரும் நெருங்கிய நண்பர்களாயினர். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த ஜூன் 2 ஆம் திகதி தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், சவுதி அரசின் எதிராளிகளுடன் இணைந்து மக்களை தூண்டிவிட முயன்றதாகவும் அதிகாரிகளுடன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் இவை அனைத்தும் மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top