News

சிறையிலிருந்து கைதியை விடுவிப்பதற்கும் டிரோன்கள்- பாரிசில் சம்பவம்.

பிரான்ஸ் தலைநகரின் சிறையிலிருந்து ஆபத்தான குற்றவாளியொருவர் தப்பித்துச்செல்வதற்கு உதவிய கும்பல் சிறைச்சாலையை வேவுபார்ப்பதற்காக டிரோன்களை பயன்படுத்தியது என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதியை கடத்திச்செல்வதற்காக ஹெலிக்கொப்டர் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அந்த ஹெலிக்கொப்டர் விமானஎதிர்ப்பு பொறிமுறைகள் அற்ற பகுதியில் தரையிறங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சிறைச்சாலையை குறிப்பிட்ட கும்பல்நன்கு வேவு பார்த்ததும் அதற்காக டிரோன்களை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பாரிசின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலை மேலாக பல டிரோன்கள் காணப்பட்டுள்ளன என பிரான்ஸின் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்

சிறைச்சாலையிலிருந்து தப்பிச்செல்வதற்கான வழிகளை அவர்கள் தேடியிருக்கலாம் அதற்காக டிரோன்களை பயன்படுத்தியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

25வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரெடொய்ன் பையிட் என்ற கைதி சிறைச்சாலையில் உள்ள விருந்தினர் பகுதியில் தனது சகோதரனுடன் உரையாடிக்கொண்டிருந்தவேளை குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக புகைக்குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் சிலர் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து பாதுகாப்பு கதவை உடைத்து பையிட்டை விடுவித்துச்சென்றனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை பத்து நிமிடங்களே நீடித்தது, பையிட்டை ஹெலிக்கொப்டரில் ஏற்றிய அவர்கள் பின்னர் ஹெலிக்கொப்டரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு காரில் தப்பியுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையொன்றிலிருந்து 25 வருட சிறைத்தண்டனை அனுபவித்த ஆபத்தான குற்றவாளியொருவர் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி தப்பிச்சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரெடொய்ன் பைட் என்ற நபரே இவ்வாறு சிறையிலிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றுள்ளார்.

குறிப்பிட்ட நபர் பாரிய கொள்ளைச்சம்பவமொன்றில் ஈடுபட்டமைக்காக 25 வருடசிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Redoine Faid ஜெயிலில் இருந்து தப்பிப்பது இது முதல் முறையல்ல எனவும் கடந்த 2013-ஆம் ஆண்டும் சிறையிலிருந்து தப்பித்ததாகவும், அதன் பின் 6 மாதங்களுக்கு பின் பொலிசார் அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவன் தற்போதும் தப்பித்து உள்ளதால், பொலிசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top