Canada

சூடு பிடிக்க தொடங்கியுள்ள ரியல் எஸ்டேட் சந்தை!

கனடா-பார்ரி மற்றும் மாவட்ட ரியல் எஸ்டேட் முகவர் சங்கம், பார்ரி பகுதியில் விற்பனை மற்றும் சராசரி விலை மேல் நோக்கி தெரிய ஆரம்பித்துள்ளதாக பரிந்துரைக்கின்றது. 2018-யூன் புள்ளிவிபரங்கள் பிரகாரம் பார்ரி பகுதியில் வீட்டு விலைகள் வருடா வருடம் அதிகரித்து வந்துள்ளதாக கருதப்படுகின்றது. இதே நேரம் விற்பனை எண்ணிக்கை 25.4-சத விகிதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூன் 2018ல் பதிவு செய்யப்பட்ட விற்பனை 252 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என பார்ரி மற்றும் மாவட்ட ரியல் எஸ்டேட் முகவர் சங்கத்தின் பிரகாரம் தெரியவந்துள்ளது. மே 2018-ல் பரிமாற்றங்களின் எண்ணிக்கை 37.1 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏப்ரலில் பரிமாற்றங்களின் எண்ணிக்கை 42.5 சதவிகிதம் குறைந்துள்ளது. 2017 ஏப்ரில் மாதத்துடன் ஒப்பிடுகையில் வீடுகளின் சராசரி விலை 15.2சதவிகிதம் குறைந்தள்ளது.

சிம்கோ கவுன்ரியில் பார்ரி உட்பட ஒட்டுமொத்த எண்ணிக்கை 14.7சத விகிதம் அதிகரித்துள்ளது. 2018 மேயிலிருந்து பட்டியல் விலை 0.9சதவிகிதம் அதிகரித்துள்ளதென புதிய இலக்கங்கள் காட்டுவதாக கூறப்படுகின்றது. பார்ரி மற்றும் மாவட்ட ரியல் எஸ்டேட் முகவர் சங்கத்தின் கூற்று பிரகாரம் சிம்கோ கவுன்ரியில் யூன் மாதம் 461-குடியிருப்பு சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top