India

சென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து – ஒருவர் பலி, 29 பேர் காயம் !

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இடிபாடுகளில் சிக்கி கொண்ட 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கந்தன்சாவடியில் புதிதாக கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் தூண் மற்றும் சாரம் பாரம் தாங்காமல் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விபத்தில் கொட்டகையின் கீழ் இருந்த 35 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு உள்ளனர். அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மீட்பு பணிகளில் ஈடுபட 8 ஆம்புலன்சுகள், 3 தீயணைப்பு வாகனங்கள் உள்பட தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 50 பேர் விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு வந்தடைந்துள்ளனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவத்து குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், கந்தன்சாவடியில் கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்த பகுதியில் மீட்புப்பணி தீவிரமாக நடக்கிறது உயிரிழப்புகள் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top