News

ஜப்பானை புரட்டிப்போட்ட கனமழை- பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!!

ஜப்பானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். வீடுகள் மூழ்கியதால் மக்கள் கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் ராணுவ படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படு மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழை காரணமாக பலவேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்களை பலி வாங்கி வருகிறது.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top