News

ஜேர்மனில் 4 மில்லியன் மதிப்பிலான தங்க நாணயத்தை திருடிய நபர்கள் கைது !

பெர்லின் நகரில் உள்ள Bode அருங்காட்சியகத்தில் நடைபெற்ற திருட்டில் ஈடுபட்ட சில திருடர்களை பொலிசர் கைது செய்துள்ளனர். சுமார் 100 கிலோ எடை கொண்ட 4 மில்லியன் மதிப்பிலான Big Maple Leaf என அழைக்கப்படும் தங்க நாணயம் Bode அருங்காட்சியகத்தில் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கனடிய நாட்டை சேர்ந்த இந்த நாணயம், Bodeஅருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருட்டு கும்பல் ஒன்று உள்ளே நுழைந்து, கண்ணாடியை உடைத்து திருடி சென்றுள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதற்காக SWAT குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பெர்லினின் பல இடங்களில் இவர்கள் நடத்திய அதிரடி சோதனையில், இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சில திருடர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள விவரத்தை கூறப்பட்டுள்ளதே தவிர, அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கமுடியாது என SWAT குழு தெரிவித்துவிட்டது. தற்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top