கீரின்லாந்தில் டன் கணக்கில் பனிப்பாறைகள் குவிந்திருப்பதால், ஒரு கிராமமே மூழ்கும் அபாயத்தில் உள்ளது. கிரீன்லாந்து நாட்டில் உள்ள சிறிய கிராமம் இன்னார்சூட். இங்கு 169 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால், இங்கு 650 அடி அகலமுள்ள பனிப்பாறை ஒன்று உள்ளது. இது கடல் மட்டத்தை காட்டிலும் 300 அடி உயரத்தில் உள்ளது. இந்த பனிப்பாறைகள் பலத்த காற்று வீசினாலே சரிந்துவிடும். அதன் பின்னர், பஃப்பின் பேவுக்குள் சென்று மிதக்கும் நிலைக்கு சென்றுவிடும். இதனால் ஆபத்து இல்லை.
ஆனால், ஒருவேளை மழைபெய்துவிட்டால் பனிப்பாறை நிலை குலைந்து கடலுக்குள் கலக்கும். இதனால் சுனாமி ஏற்பட்டு இன்னார்சூட் கிராமத்தையே அழித்துவிடும். இதனையறிந்ததால் 33 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மேலும், பனிப்பாறையை சுற்றி விடப்பட்ட படகுகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதத்தில் நூக்காட்சியாக் கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டு 11 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் 4 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.