News

டெனீஸ் விடயத்தில் நீதிமன்று தீர்ப்பை 24 வரை நீடித்தது! – ஆளுநர், முதலமைச்சருக்கு இரு வார கால அவகாசம்,

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் ஆட்சேபனைகளைத் தாக்கல்செய்வதற்கு இரு வார காலம் வழங்கியுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், வடக்கு அமைச்சரவையின் அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்கின்றார் என்ற தனது இடைக்காலத் தீர்ப்பையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரையில் நீடித்தது.
வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டமுரணானது என்று தெரிவித்து பா.டெனீஸ்வரன், முதலமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்ற இடைக்காலத் தடையுத்தரவை கடந்த 29ஆம் திகதி வழங்கி டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்கின்றார் என்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்றுமுன்தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பில் அவரது சட்டத்தரணி லக்ஷ்மன் ஜெயக்குமார் முன்னிலையானார். இடைக்காலத் தீர்ப்பை நீடிக்கக்கூடாது என்றும், உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மன்றில் தெரிவித்தார்.
டெனீஸ்வரனின் சட்டத்தரணி, “நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று முதலமைச்சரின் சட்டத்தரணி மன்றில் பொய்யுரைக்கின்றார். இணையதளத்தில் நீதிமன்ற உத்தரவைப் பார்த்துள்ளார்கள். அதனை ஒப்புக்கொண்டுள்ளனர். மன்றில் வழக்கு நடக்கும்போது, அவரது சட்டத்தரணிகள் இருந்து குறிப்பெடுத்தார்கள். ஆனால், மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தீர்ப்பை ஒரு வார காலமாகியும் நடைமுறைப்படுத்தவில்லை. இவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல்செய்யவேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தரப்புச் சட்டத்தரணிகளிடம் ஆட்சேபனைகளை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல்செய்வதற்கு அவகாசம் வழங்கிய நீதிமன்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனியாகத் தாக்கல்செய்யுமாறு தெரிவித்தது. இந்த வழக்கை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top