Canada

டொரண்டோ உணவக துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சிறுமியின் அடையாளம் தெரிந்தது .

கனடா துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் அடையாளத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Faisal Hussain என்பவன் டொரண்டோ உணவகத்தில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் Reese Fallon (18) என்ற பெண்ணும் ஒரு 10 வயது சிறுமியும் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.அந்த சிறுமியின் பெற்றோர் அந்த துயர நேரத்தில் அவளது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை என்றும் அப்போது கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவளது அடையாளத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். Markham நகரைச் சேர்ந்த அவளது பெயர் Julianna Kozis என்று பொலிசார் தெரிவித்தனர்.
Julianna Kozis சுடப்பட்டதால்தான் கொல்லப்பட்டாளா என பொலிசார் உறுதி செய்ய மறுத்து விட்டாலும், காயப்பட்ட ஒரு சிறுமியைக் கண்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Md Ashaduzzaman என்னும் அந்த நபர், சம்பவம் நடந்த உணவகத்தின் கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அப்போதுதான் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது தனது மகள் சுடப்பட்டதாக ஒரு பெண் அலறிக் கொண்டிருந்ததை தான் பார்த்ததாகவும், தரையில் கிடந்த அந்த சிறுமியின் காலிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியதாகவும் அவளது தாய் ஒரு துணியின் உதவியோடு இரத்தத்தை நிறுத்த முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு குழந்தையை எழுப்ப அவர் முயற்சித்ததாகவும் அவள் கண்களை திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் Julianna Kozis உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் Markham நகரத்தில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என Markham நகர மேயர் Frank Scarpitti ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top