Canada

டொரண்டோ கொலையாளியின் அடையாளத்தையும், கொல்லப்பட்ட பெண்ணின் அடையாளத்தையும் பொலிசார் வெளியிட்டனர்

கனடாவின் Greektown பகுதியில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் அடையாளம் தெரியவந்துள்ளது. அவன் பெயர் Faisal Hussain (29) என்று தெரியவந்துள்ளது. அவன் ஏற்கனவே பல மன நலப் பிரச்சினைகளால் பதிக்கப்பட்டிருந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வாழ்நாள் முழுவதுமே அவன் psychosis மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகளால் அவதியுற்று வந்ததாகவும் அவனுக்கு உதவுவதற்காக பல முயற்சிகளை தாங்கள் மேற்கொண்டதாகவும் இது மாதிரியான ஒரு கோர சாவு அவனுக்கு வரும் என்று தாங்கள் எண்ணியதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Faisal Hussainஇன் குடும்பம் ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறது. Faisalஇன் தங்கை ஒரு விபத்தில் பல ஆண்டுகளுக்குமுன் இறந்து போனாள். அவனது சகோதரன் மருத்துவமனை ஒன்றில் கோமாவில் இருக்கிறான். அவனது தந்தையும் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளம்பெண்ணும் ஒரு சிறுமியும் உயிரிழந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் அடையாளத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். 18 வயதான அந்த பெண்ணின் பெயர் Reese Fallon, அவள் டொரண்டோ கடற்கரை பகுதியைச் சேர்ந்தவள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் உயிரிழந்த 10 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிட அவளது பெற்றோர் விரும்பாததால் அவளைக் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top