News

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கொழும்பில் சனியன்று விசேட கூட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நாளை விசேடகூட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் மருதானை, சி.எஸ்.ஆர். மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் குறித்த அமைப்பின் உறுப்பினர்கள், அமைச்சரின் ஆலோசகரான சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா, சமூக ஆர்வலர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள்எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரையும் ஒரேதவணையில் விடுதலை செய்யவேண்டும், இவர்களின் விடுதலையானது குறுகிய காலத்திற்குள் அமைதல் வேண்டும் உள்ளிட்ட மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் மனுவொன்றைக்கையளித்திருந்தது. இந்நிலையிலேயே நாளை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top