தாய்லாந்து படகு விபத்தில் உயிரிழப்பு 41 ஆக உயர்ந்தது.

தாய்லாந்து நாட்டின் பிரபல சுற்றுலா தீவில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 41 ஆக உயர்ந்துள்ளது.
தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே சீனாவை சேர்ந்த 93 சுற்றுலா பயணிகள் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 12 பணியாளர்களுடன் சென்ற படகு கடந்த 5-ம் தேதி மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மீட்கப்பட்டுவிட்டாலும் 20 பேர் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
மீட்புப்பணிகளில் தாய்லாந்து கடற்படை வீரர்களும் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த 41 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், காணாமல்போன 15 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.