துப்பாக்கி சூட்டில் பலியான மாணவியை கௌரவிக்க ஒரு மணித்தியாலத்தில் $12K புலமை தொகை!

ரொறொன்ரோ-டன்வோர்த்தில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட றீஸ் வலோனின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவரை கௌரவிக்க ஒரு உதவித்தொகை திட்டத்தை ஆரம்பித்தனர். இவரது எதிர்கால இலக்கை இவரிடமிருந்து பறித்து கொண்டதை கௌரவிக்க இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
ஞாயிற்றுகிழமை இரவு ரொறொன்ரோ கிறிக் ரவுனில் இடம்பெற்ற திமிர்த்தனமான சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரில் வலோன் ஒருவராவார்.இதே சமயம் வைத்தியசாலையில் துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்பட்ட மற்றயவர்கள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5,000டொலர்கள் இலக்குடன் GoFundMe பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இந்த புலமை தொகை ஒரு மணித்தியாலத்தில் 12,000டொலர்களிற்கும் மேலான தொகையை சேகரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
றீஸ் மெல்வேர்ன் கல்லூரி நிறுவனத்தின் பழைய மாணவியாவார். சேகரிக்கும் தொகை ஒரு அறக்கட்டளையில் வைப்பு செய்யப்பட்டு குறிப்பிட்ட கல்லூரி பட்டதாரி மாணவர் ஒருவருக்கு ஆண்டு மானியமாக வழங்கப்படும்.
வெலொன் நர்சிங் பட்டதாரியாக வர விரும்பியதால் புலமை தொகையும் நர்சிங் திட்டத்திற்கு நுழையும் மாணவர் ஒருவருக்கே வழங்கப்பட உள்ளது. வலொன் இலையுதிர் காலத்தில் நர்சிங் கல்வி பெற மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம் செல்ல இருந்தவர்.