நடுரோட்டில் புலம்பெயர்ந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்: அனாதையான ஐந்து குழந்தைகள் !!

கனடாவில் புலம்பெயர்ந்த கணவன், மனைவி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர்களின் ஐந்து குழந்தைகளும் அனாதையாகி உள்ளார்கள். வியட்னாமை சேர்ந்த பின் தன்ஹா – தி தரன் தம்பதி கனடாவின் லேக்ஷோர் நகரில் வசித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்றுள்ளார்கள்.
காரை மைக் கெலிக் என்பவர் ஓட்டிய நிலையில் எதிரில் வந்த வாகனம் மீது கார் மோதியுள்ளது. இதில் காரில் இருந்த மைக், தன்ஹா, தரன் ஆகிய மூவரும் உயிரிழந்தார்கள். இதையடுத்து தன்ஹா – தரன் தம்பதியின் ஐந்து குழந்தைகளும் அனாதையாகி உள்ளார்கள்.
தம்பதியின் மரணம் மிகபெரிய சோகமான விடயம் என கூறியுள்ள அவர்களின் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஐந்து குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறார்கள். மொத்தமாக $10,000 பணத்தை நிதியாக திரட்ட வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது.