நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபட சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, வெளிநாட்டவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு தமிழ் தாய்மார்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் தமிழர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, தமிழ் மண்ணில் நாங்கள் பலவற்றை இழந்து விட்டோம் என்றும் தமிழர்களுக்கு இந்த உரிமை கூட இல்லையா எனவும் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளர். நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயிலாகும். இலங்கையில், தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்குள் பெண்கள் செல்வதற்கு தற்போது மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.