Canada

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது வருட தட கள விளையாட்டுப்போட்டி-2018

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும், சமூக நலமும் அமைச்சு நடாத்திய 3 வது வருட தட கள விளையாட்டுப்போட்டி மார்க்கம் நகரில் July 2ந் திகதி Bill Crothers Secondary High School மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திரு. குமணன் குணரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், இவர் ஒரு முது நிலை இளம் பட்டதாரியும் ஆவார். நீண்ட வார விடுமுறையாகவும், கடும் வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த போதிலும், Brampton இல் இருந்து Oshawa வரையும் உள்ள இடங்களில் இருந்து வந்து கணிசமான விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாக இருந்தது. மைதானத்திலும், அலுவலகத்திலும் பல தொண்டர்கள் இணைந்து போட்டிகளை நடாத்த உதவினார்கள். வீரர்களுக்கான விருதுகள், சான்றிதழ்கள், வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. கடும் வெப்பநிலை எச்சரிக்கை, கொட்டும் மழை என சவாலான கால நிலைகளோடு போராடி வெற்றிகரமாக நடைபெற்ற 3 வது வருட தடகள விளையாட்டுப்போட்டி 2018 இற்கு மார்க்கம் நகர பிதா அவர்கள் வழங்கிய வாழ்த்து வலுவான சான்றாக அமைகின்றது.
https://photos.eettv.com/

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top