குகைக்குள் சிக்கிய நிலையில் உலகின் கவனத்தை ஈர்த்து சர்வதேசத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட தாய்லாந்தின் 12 சிறுவர்களும் இன்று ஊடகங்களை சந்தித்துள்ளனர்.
இந்த ஊடக சந்திப்பின்போது அவர்கள் தாங்கள் மீட்கப்பட்ட விதத்தினை வர்ணித்துள்ளதுடன் தங்களின் மீட்பு நடவடிக்கைக்கு உதவியவர்களிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த அனுபவம் தங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு வாரங்கள் குகைக்குள் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பின்னர் முதன்முதலாக ஊடகங்களின் பின்னர் தோன்றியுள்ள அவர்கள் தங்கள் கதையை வர்ணித்துள்ளனர்.
12 பேர் கொண்ட கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்த சிலர் அந்த குகைக்கு முன்னர் சென்றிருக்கவில்லை இதன் காரணமாக ஆர்வம் மிகுதியால் குகைக்குள் நுழைந்தனர் என பயிற்றுவிப்பாளர் எகபொல் சன்டவொங் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுப்பயிற்சிகளின் பின்னர் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மணிநேரத்திற்கு மேல் நிலத்தின் கீழ் காணப்பட்ட சுரங்கப்பாதைகளை ஆராய்ந்தோம்,இருட்டி விட்டது என நாங்கள் திரும்ப எண்ணியவேளை குகை வெள்ளத்தால் முற்றாக நிரம்பியிருந்தது வெளியேறும்ப பாதை முற்றாக தடைப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் நாங்கள் சிக்குண்டுவிட்டோம் என தெரிவித்தனர் ஆனால் மீட்க யாராவது வருவார்கள் என உறுதியளித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓரு கட்டத்தில் உள்ளே சிக்குண்டதை உணர்ந்ததும் அவர்கள் உள்ளே தங்குவதற்கான இடத்தை தேடி சென்றுள்ளனர்.
உள்ளே சுத்தமான நீர் தென்பட்ட செங்குத்தான பகுதியை கண்டோம்,அங்கிருப்பதே நல்லது நான் அவர்களிற்கு தெரிவித்தேன் என பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அன்றிரவு உறங்கச்செல்வதற்கு முன்னர் நான் அவர்களிற்கு பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்தேன் அன்றிரவு பிரார்த்தனை செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் பயப்படவில்லை அடுத்த நாள் நீரின் அளவு குறைந்து விடும் மீட்க யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருந்தனர் எனவும் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நீர்மட்டம் உயர்ந்தது
எனினும் நீர்pன் அளவு குறையவில்லை, நான் நீர் மட்டம் அதிகரிப்பதை உணர்ந்தேன்,அவர்களை உயரமான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டேன், என தெரிவித்த பயிற்றுவிப்பாளர் நிலத்தை தோண்டி வெளியேறுவதற்கான பாதை ஏதாவது உள்ளதா என பார்க்குமாறும் அவர்களை கேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட பயிற்சிக்கு பின்னர் உணவுண்டதால் அவர்களிடம் உணவுப்பொருட்கள் எவையும் இருக்கவில்லை இதனால் அவர்கள் நீரையருந்தி சமாளித்துள்ளனர்.
உணவைநினைத்தால் பசியெடுக்கும் என்பதால் உணவை நினைவிக்கவில்லை என அவர்களில் வயது குறைந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தருணம்
மீட்பு பணியாளர்கள் தங்களை வந்தடைந்த அந்த தருணத்தை 14 வயது அடுன் சாம் வர்ணித்துள்ளான்.
வெளியேறுவதற்கு வழியுள்ளதா என பார்ப்பதற்காக குகையை தோண்டிக்கொண்டிருந்த சமயத்தில் சிலர் பேசும் சத்தம் கேட்டது,நான் ஏனையவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டேன்,
பிரிட்டிஸ் மீட்பு பணியாளர்களை கண்ட தருணத்தில் நான் அதிர்ச்சியடைந்து போனேன் என்னால் ஹலோ என தெரிவிக்க மாத்திரம் முடிந்தது என சிறுவன் தெரிவித்துள்ளான்.