நெடுஞ்சாலையில் நடந்த மோசமான சாலை விபத்து: 18 பேர் பலியான கோர சம்பவம் .

சீனாவில் பயணிகளின் பேருந்து மீது லொறி மோதிய விபத்தில், 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூனான் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது லொறி ஒன்று பலமாக மோதியது. இந்த விபத்தில் 18 பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இரு வாகனங்களும் வேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக பொலிசார் கூறுகையில் ‘ஹூனான் மாகாணத்தில் பயணிகளுடன் வந்த பேருந்து மீது லொறி மோதியது. இதில் 18 பேர் பலியாகினர். இரு வாகனங்களும் பெரும் சேதத்திற்கு உள்ளானதால், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது’ என தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கடந்த சில மாதங்களில் நடந்த மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் மட்டும் 2,60,000 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.