நெடுஞ்சாலையை விட்டு வாகனம் விலகி சாரதி மரணம்!

ஒசாவா-நெடுஞ்சாலை 401ல் சென்று கொண்டிருந்த டிராக்டர்-டிரெயிலர் ஒன்று ஒசாவாவில் நெடுஞ்சாலையை விட்டு விலகியதால் விபத்திற்குள்ளாகி சாரதி கொல்லப்பட்டுள்ளார். ஹாமொனி வீதி பகுதியில் நெடுஞ்சாலை கிழக்கு பாதை அருகில் பள்ளத்தில் அதிகாலை 5.30-மணியளவில் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளத்தை நோக்கி சென்ற சிறிது தூரத்தில் மரமொன்றுடன் மோதியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் கான்ஸ்டபிள் லோறன் பால் தெரிவித்துள்ளார்.
அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் சம்பவ இடத்தை அடைந்த சமயம் சாரதி நாடித்துடிப்பு அற்ற நிலையில் காணப்பட்டு பின்னர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மரணமடைந்தவரின் பெயர் மற்றும் வயது குறித்த விபரங்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.