Canada

நெடுஞ்சாலை மோதலில் அறுவர் காயம்!

மிசிசாகா-குயின் எலிசபெத் வே நெடுஞ்சாலையில் 30-வயது மனிதன் ஒருவர் சந்தேகத்திற்கிடமான நிலையில் பலவீனமாக வாகனம் செலுத்தியதால் மிசிசாகா பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஆறு பேர்கள் காயமடைந்துள்ளதனர். ஞாயிற்றுகிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த மோதலிற்கு காரணமாக இருந்த சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

நெடுஞ்சாலை கிழக்கு பாதைகளில் ஹியுஒன்ராறியோ முதல் கௌத்ரா விதியில் சம்பவம் நடந்துள்ளதாக அறியப்படுகின்றது. இருவர் ரொறொன்ரோ கடுமையான காயமடைந்தோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றய நால்வர் அருகாமையில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பீல் பிராந்திய அவசர மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட மோதலில் இரண்டு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இரண்டும் உருண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வாகனங்கள் உருண்டு நெடுஞ்சாலையில் விழுந்ததால் நெடுஞ்சாலையின் இரு பாதைகளையும் பிரிக்கும் இரும்பு கம்பியின் நீண்ட பகுதி பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிதறிய சிதறல்களினால் மேற்கு பாதை வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

விபத்தின் போது இரு வாகனங்களும் கிழக்கு பாதையில் பயணித்து கொண்டிருந்தன. ஒரு எஸ்யுவியில் இருந்த ஆறு பேர்களில் 5-பேர்கள் காயமடைந்துள்ளனர். செடான் வாகனத்தின் சாரதி ஒருவரும் காயமடைந்துள்ளார். சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விசாரனை தொடர்கின்றது. வாகனங்களில் முகப்பு பெட்டி கமரா வீடியோ அல்லது விபத்து தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் ஒன்ராறியோ மாகாண பொலிசாருடன் (905) 278-6131 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top