Canada

நோர்த் யோர்கில் நடந்த கொடூர சம்பவம்: பரிதாமாக உயிரிழந்த இளைஞன்!!

நோர்த் யோர்க் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று அதிகாலை 12:45 மணியளவில் டோரிஸ் மற்றும் ஹோம்ஸ் அவனியூ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ரொறன்ரோ தீயணைப்புப் பிரிவினர், காருக்குள் சிக்குண்டிருந்தவரை மீட்டிருந்த போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், குறித்த பகுதிக்கான வீதி மூடப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top