Canada

பட்டன்வில் விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி மரணம்!

யோர்க் பிராந்தியத்தில் பட்டன்வில் விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று மோதியதில் அதன் விமானி கொல்லப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை மாலை 8-மணியளவில் விபத்து நடந்துள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே விமானம் மோதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே விமானி இறந்து விட்டார். விமானத்தில் வேறு எவரும் இருந்ததாக தெரிய வரவில்லை. விமானி சர்வதேச அபாய அழைப்பை விடுத்ததாக LiveATC.net விமான பதிவு வலைத்தளம் மூலம் ஆடியோ பதிவு பகிரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

“Buttonville tower, mayday, mayday, mayday,” அவர் சொல்வதை கேட்க முடியும் என்பதாகும். விமானம் கீழே செல்வதாகவும் தீப்பிடித்தாகவும் விமானி தெரிவித்துள்ளார். சாட்சியங்களை திரட்டுவதற்காக கனடா போக்குவரத்து பாதுகாப்பு பேச்சாளர் ஒருவர் சம்பவ இடத்திற்கு அனுப்ப பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top