India

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி,17 பேர் படுகாயம் !!

நியூடெஹ்ரி: உத்தரகாண்டில் அரசு பேருந்து, பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள சம்பா நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று சென்றுக் கொண்டிருந்தது.

ரிஷிகேஷ்-கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த 250 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top