News

பாகிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி, இம்ரான்கான் கட்சி வேட்பாளர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் படுகாயமடைந்தார். அவரது டிரைவர் மற்றும் பாதுகாவலர் பலியாகினர்.

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாணங்களில் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த இம்ரான்கான் கட்சி வேட்பாளர் இக்ரமுல்லா கண்டாபூர் வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் கண்டாபூர் படுகாயம் அடைந்தார். அவரது பாதுகாவலர் மற்றும் டிரைவர் ஆகியோர் பலியாகினர். படுகாயம் அடைந்த கண்டாபூர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைப்படை தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top