பிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை இறந்த கிடந்த பரிதாபம்..

பிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் Nouvelle-Aquitaine மாகாணத்தின் La Roche-l’Abeille பகுதியிலிருந்து கடந்த 12-ஆம் திகதி GIGN படையினருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் கணவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை கடத்திவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தந்தை இருக்கும் பகுதிக்கு விரைந்த GIGN படையினர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஆனால் தந்தை உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குழந்தையின் பெற்றோர் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தாகவும், குழந்தையை காண அவரது தந்தை பல முறை வந்த போதும், அவர் அனுமதிக்கவில்லை எனவும் இதன் காரணமாக இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இது ஒரு தற்கொலையாக கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.