பிரிட்டனில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீச்சு – 3 பேர் கைது!

மத்திய இங்கிலாந்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீசிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய இங்கிலாந்துக்கு உட்பட்ட வார்செஸ்ட்டர் நகரில் உள்ள ஹோம் பார்கெய்ன்ஸ் ஷாப்பிங் மாலுக்குள் நேற்று நுழைந்த சிலர் அங்கிருந்த மூன்று வயது சிறுவன் மீது ஆசிட் வீசினர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பாக 22, 25 மற்றும் 26 வயதுடைய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.