News

பிரித்தானியாவில் இளைஞரின் முகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ !!

பிரித்தானியாவில் இரண்டு பேருக்கு நடந்த வாக்குவாதத்தில் இளைஞரின் முகத்தில் நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Peterborough பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், James Lander(31) என்ற நபர் Sir Delamore(45) என்ற நபரின் காரை சேதப்படுத்தி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த Sir Delamore அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்த துப்பாக்கியை வைத்து மிரட்டிய போது, அந்த நபர் சுடப் போகிறாயா, சுடு பார்க்கலாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த அந்த நபருக்கு மீண்டும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், James Lander-ன் முகத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு இப்போ சொல் பார்க்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் நிலைதடுமாறிய James Lander, அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து James Lander தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், தான் தற்போது நலமாக இருக்கிறேன். அன்றைய சம்பவத்தின் போது அந்த நபர் என் முகத்தின் கண்ணின் அருகில் துப்பாக்கியால் சுட்டுவிட்டான். ரத்தம் வழிந்த நிலையில் துடித்த என்னால், காரை ஓட்ட முடியவில்லை. அதன் காரணமாக அருகில் இருப்பவரின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அறித்த பொலிசார் Sir Delamore மீது துப்பாக்கியால் சுட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, இன்று Peterborough Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top