News

பிரித்தானியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஈழத்து சிறுமி! தன்னம்பிக்கை ஊட்டும் துஷா..

பிரித்தானியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்த இலங்கை தமிழ் சிறுமி தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2011ஆம் ஆண்டு துஷா கமலேஷ்வர் என்ற சிறுமி இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். உறவினரின் கடையில் புகுந்த கும்பல் ஒன்று கடைக்கு தீ வைத்ததுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

இதன் போது கடையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயமடைந்துள்ளார். இதனால் அவரது கால்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டன. அன்று முதல் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த சிறுமி தான் நிச்சயமாக ஒரு நாள் நடப்பேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வாரம் 13 வயதை எட்டும் துஷா தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாட எதிர்பார்த்துள்ளார்.

தனக்கு இதுவரை சிகிச்சையளித்த Stoke Mandeville வைத்தியசாலைக்கு அவர் நன்றிகளை தெரிவித்துள்ளார். தனது காலில் சில அசைவுகளை தான் உணர்வதாக அவர் கூறியுள்ளார். தன்னிடமுள்ள தன்னம்பிக்கை காரணமாகவே இந்த அசைவுகளை பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் எதிர்காலத்தில் நடக்க முடியும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

எனினும் எவ்வளவு காலம் என தனக்கு தெரியாதென துஷா குறிப்பிட்டுள்ளார். தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வைத்தியராக வேண்டும் என்பதே தனது லட்சியம். இதன் மூலம் இன்னுமொரு உயிரை காப்பாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 41 வயதான தாய் ஷர்மிளா மற்றும் தந்தை கமலேஷ்வர், துஷாவை பாதுகாத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top