பிரித்தானியாவில் தொடரும் ஆசிட் வீச்சு தாக்குதல்… கவலைக்கிடமான நிலையில் பெண் மீட்பு !

பிரித்தானியாவில் மர்ம நபர்கள் சிலர் நடத்திய ஆசிட் வீச்சு தாக்குதலில் சிக்கி பெண் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரித்தானிவின் Worcester பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் 5 பேர் 3 வயது குழந்தையின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக விரைந்து செய்யப்பட்ட பொலிஸார், சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், Birmingham பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென 43 வயதுள்ள பெண் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் பெண்ணின் முகம் முழுவதும் பலத்த காயமடைந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, ஏதேனும் தகவல் கிடைத்தால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.