பிரித்தானியாவில் பெற்றோரின் கவனக்குறைவால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

பிரித்தானியாவில் பெற்றோரின் கவனக்குறைவால் 6 வயது சிறுவன் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Nottingham பகுதியில் கடந்த 17-ம் தேதியன்று, வீட்டின் ஜன்னலிலிருந்து 6 வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் உதவியாளர்கள், சுய நினைவற்று மயங்கிய நிலையில் கிடந்த சிறுவனை மீட்டு Queens Medical Centre-ல் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவனின் மரணம் ஒரு விபத்து என கூறி வழக்கை முடித்துள்ளனர்.