News

பிரித்தானியாவில் 3 வயது பச்சிளங்குழந்தை மீது ஆசிட் வீச்சு!

பிரித்தானியாவில் மர்ம நபர்கள் சிலர் வேண்டுமென்றே 3 வயது பச்சிளங்குழந்தை மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. பிரித்தானிவின் Worcester அருகே உள்ள Shrub Hill Retail Park-ல் 3 வயது பச்சிளம் குழந்தை மீது மர்ம நபர்கள் சிலர் ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் கை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்த சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு உள்ளூர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டிக்கொள்கிறோம்.

அவர்கள் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் வேண்டுமென்றே நடத்தியுள்ளனர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. இதில் சந்தேகப்படும்படியாக Wolverhampton பகுதியை சேர்ந்த 39 வயதுள்ள ஒரு நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top