News

பிரித்தானியா இசைத்திருவிழாவில் தாக்குதல்.. மர்ம நபர்களை தேடும் பணியில் பொலிஸார் ..

பிரித்தானியாவில் நடைபெற்ற இசைத்திருவிழாவின் போது, மர்ம நபர்கள் சிலர் நடத்திய தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர். பிரித்தானியாவின் Chigwell பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று மிகப்பெரிய இசைத்திருவிழா ஒன்று நடைபெற்றுள்ளது. 6 மேடைகளில் 100 கலைஞர்கள் தங்களது இசைநிகழ்ச்சியினை வழங்கிக்கொண்டிருந்தனர். அதனை 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென கூட்டத்திற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் கண்மூடி தனமாக அங்கிருந்த சில நபர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், காயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், 22 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மட்டும் பலத்த காயங்களுடன் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் லேசான காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட மற்ற இருவரும், சிகிச்சை முடிந்து வெளியேறிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் வேளையில், சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் முகம் தெரியும் சில காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள Mel Dee என்னும் பெண், “என் கண் முன்னாள் ஒருவர் குத்தப்படுவதை நான் பார்த்தேன். இதற்கு முன்னர் இப்படிபட்ட ஒன்றினை நான் பார்த்ததில்லை. ஏன் மக்கள் இதை செய்கிறார்கள்” என பதிவிட்டிருந்தார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top