News

பிரித்தானியா விமானநிலையத்தில் இந்த பொருட்கள் எல்லாம் விமானத்தில் கொண்டு செல்ல தடை?

பிரித்தானியாவில் விமானத்தில் செல்பவர்களுக்கு சில பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு Etihad விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து, அபுதாபிக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த போது, ஐஎஸ் தீவிரவாதிகள் சிலர் வெடிக்கும் தன்மையுடைய சில பவுடர்களை குறித்த விமானத்தில் செல்வதற்கு தயாராக இருந்தனர்.

அப்போது அவர்கள் விமானநிலையத்திலே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்நிலையில் பிரித்தானியா அரசு சில அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது மேக் அப் பொருட்கள், குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடர்கள், நறுமணப் பொருட்கள் போன்றவை அதிகளவு விமானத்தில் கொண்டு செல்ல முடியாது எனவும், அதற்கு விரைவில் தடை வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், பிரித்தானியாவில் இருந்து விமானம் மூலம் வேறு பகுதிகளுக்கு செல்வோர், தங்களுடைய கையில் இருக்கும் லக்கேஜில் குழந்தைகளுக்கு தேவையான பவுடர்களோ, மேக் அப் கிட்டோ அல்லது நறுமணப் பொருட்களோ எதுவும் கொண்டு செல்ல முடியாது. அப்படி கொண்டு செல்ல வேண்டும் என்றால் 56 கிராம் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கும் விமானநிலையத்தில் கடுமையான சோதனைகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. விமானத்தில் இது போன்ற பொருட்கள் எல்லாம் கொண்டு செல்லக் கூடாது என சில நாடுகளில் 12 ஆண்டுகளுக்கு முன்பே தடை வந்துவிட்டதாகவும், அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த தடை பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top