Canada

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க ஒட்டாவாவிடம் உதவிக்கரம் நீட்டியது ஒன்ராறியோ.

ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக இருப்பிடங்கள் போன்ற ஆதரவுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் ஒட்டாவாவிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அந்தவகையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெற்றுத் தருமாறு ஒன்ராறியோ அரசாங்கம் ஒட்டாவாவிடம் கோரியுள்ளது.

இந்த நிதி உதவியை கோரி ஒன்ராறியோ குழந்தைகள், சமூக மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் லிசா மக்லியோட், ஒட்டாவா அமைச்சர் ஜீன் யூவ்ஸ் டக்ளஸிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சமூக உதவி செலவுகளுக்கு 90 மில்லியன் அமெரிக்க டொலரும், ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவையும் தாம் எதிர்கொள்வதாகவும் லிசா மக்லியோட் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 18 மாதங்களில் 36 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.<

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top