புறூஸ் மக்ஆதருக்கு சொந்தமான லீசைட் பகுதிக்கு பின்னால் உள்ள மலை இடுக்கில் மனித எச்சங்கள்!

ரொறொன்ரோ–தொடர் கொலைகாரன் என பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்ட புறூஸ் மக்ஆதருக்கு சொந்தமான லீசைட் பகுதிக்கு பின்னால் ஒரு மலை இடுக்கில் இருந்து மனித உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உர குவியல் ஒன்றிற்குள் இருந்து இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசார் முன்னர் ஏழு ஆண்களின் உடல்களை-சிதைக்கப்பட்ட நிலையில்- கடந்த பிப்ரவரியில் கண்டு பிடித்தனர். மக்ஆதர் மீது எட்டு பேர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
புதன்கிழமை கண்டு பிடிக்கப்பட்ட எச்சங்கள் ஒன்ராறியோ தடயவியல் நோய்குறியியல் சேவைகள் பிரிவிற்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண பொலிசார் மற்றும் டர்ஹாம் பிராந்திய பொலிசாருடன் ஒன்ராறியோ தடயவியல் நோய்குறியியல் சேவைகள் அதிகாரிகளும் இச்சம்பவம் குறித்த ஆய்வில் உதவுகின்றனர்.