Canada

மக்கள் கூட்டத்தில் Tec-9 துப்பாக்கி பிரயோகம்!

யு.எஸ்சில் இடம்பெற்ற பல மக்கள் கூட்டத்தில் கொடிய துப்பாக்கி சூட்டு சம்பவங்களிற்கு பயன் படுத்தப்பட்ட துப்பாக்கி ஒன்றை உபயோகித்த இரு மனிதர்களை ரொறொன்ரோ பொலிசார் கைது செய்தனர். ரொறொன்ரோ, எற்றோபிக்கோ பகுதியில் சிமித்வீல்ட் சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை காலை ஒரு மக்கள் கூட்டத்தில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் இத்துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலை 27 மற்றும் விஞ்ச் அவெனியு மேற்கு பகுதியில் அமைந்துள்ள மது அருந்தகம் ஒன்றின் அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இரு மனிதர்கள் ஒரு கைத்துப்பாக்கியில் இருந்து இரண்டு சுற்றுக்கள் சுட்டுள்ளனர். எவரும் பாதிக்கப்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்ததுடன் குண்டுகள் நிரப்ப பட்ட Intratec TEC-DC9 (“Tec-9”) எனப்படும் துப்பாக்கியையும் கண்டுபிடித்தனர்.

இத்துப்பாக்கி 30-சுற்றுக்கள்கொண்ட 9எம்எம் பரபெல்லும் வெடி மருந்துகள் கொண்டு நிரப்பப்பட்டது என அறியப்படுகின்றது. ரொறொன்ரோவை சேர்ந்த 39-வயதுயை இன்டர்போல் வுளொரா மற்றும் 18-வயது ஜஸ்ரின் சிங் இருவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாவர். 1993ல் இடம்பெற்ற கலிபோர்னியா வீதி-சான் பிரான்சிஸ்கோ துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பபாக்கியும் TEC-9 வகையை சேர்ந்தது. இச்சம்பவத்தில் துப்பாக்கிதாரி உட்பட ஒன்பது பேர்கள் இறந்தனர்.

துப்பாக்கிதாரி உட்பட்ட 15பேர்கள் கொல்லப்பட்டு 24பேர்கள் காயமடைந்த கொலம்பைன் உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற சூட்டு சம்பவத்திலும் TEC-9 வகை துப்பாக்கி ஒன்றே பயன்படுத்தப்பட்டது. கனடாவில் இவ்வகை துப்பாக்கி தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது சட்ட ரீதியாக கொள்முதல் செய்ய முடியாது ஆனால் 1998-ற்கு முன்பு இதனை வைத்திருந்தவர்கள் “பாட்டனார் சலுகைகள்”; அடிப்படையில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top