Canada

மந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்!

ஒட்டாவா–பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ புதன்கிழமை மந்திரி சபையில் கணிசமான ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளார். தற்போதைய மந்திரிகளை மாற்றி அமைத்துள்ளதுடன் சட்ட சபைக்கு புதியவர்களையும் கொண்டு வந்துள்ளார். 2019-ல் இடம்பெற இருக்கும் தேர்தலை முன்னிட்டே இந்த மாற்றம் என அறியப்படுகின்றது. தனது மந்திரிசபையில் சில புதிய பதவிகளை ஏற்படுத்தி சபையை விரிவாக்கியுள்ளதோடு புதிய பதவிகளை உருவாக்கியுள்ளதுடன் பல தலைப்புக் களையும் ஏற்படுத்தியுள்ளார்.

கவர்னர் ஜெனரல் ஜூலி பயெட்டி பதவியேற்பு விழாவிற்கு தலைமை தாங்கினார். மீன் பிடித்தல், கடல் சார் மற்றும் கனடிய கடலோர பாதுகாப்பு அமைச்சரான டொமினிக் லபிலாங் சர்வதேச அரசாங்க மற்றும் வடக்கு விவகார உள்நாட்டு வர்த்தக அமைச்சராக நியமனம் பெறுகின்றார். இவர் முன்னர் மீன் பிடி கடல்கள் மற்றும் கனடிய கடலோர பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர்.

சர்வதேச வர்த்தக வேறுபாடு எனும் புதிய அமைச்சர் புதிய அமைச்சராக பதவி ஏற்கின்றார்.இயற்கை வளங்கள் அமைச்சராக இருந்த ஜிம் கர். முன்பு கனடிய பாரம்பரிய அமைச்சராக இருந்த மெலானி ஜொலி சுற்றுலா மற்றும் அதிகாரபூர்வ மொழிகள் மற்றும் பிரெஞ் மொழி பேசும் சமுதாய அமைச்சராக பதவி ஏற்கின்றார். அமர்ஜித் ஷோஹி இயற்கை வளங்கள் அமைச்சராகின்றார். முன்னர் உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் அமைச்சராக இருந்தவர்.

பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக இருக்கும் கார்லா குவால்ட்ரௌவ்விற்கு அணுகல் தன்மை என்ற மேலதிக பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தக அமைச்சராக இருந்த François-Philippe Champagne சமூகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராக நியமனம் பெறுகின்றார். கியுபெக் எம்பி பப்லோ றொட்றிகஸ் கனடிய பாராம்பரியம் மற்றும் பன்முக கலாச்சார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் லிபரல் கொறடாவாக இருந்தவர்.

ஒன்ராறியோ எம்பி பில் பிளயர் எல்லை பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குறைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவும் ஒரு புதிய பதவியாகும். ஒன்ராறியோ எம்பி Mary Ng சிறு வணிகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 2017 இடைத்தேர்தலில் வெற்றி பெற முன்னர் இவர் பிரதம மந்திரி காரியாலயத்தில் நியமனங்கள் இயக்குநராக இருந்;தவர்.

ஒன்ராறியோ எம்பி பிலோமினா ட்ரசி முதியோர் அமைச்சராக ஒரு புதிய பதவி பெறுகின்றார். லிபரல் உட்குழுவில் உதவி கொறடாவாக இருந்தவர். மீன்பிடி கடல்கள் மற்றும் கடலோர காவல்துறை அமைச்சராக பிரிட்டிஷ் கொலம்பிய எம்பி ஜோனத்தன் வில்கின்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்று சூழல் துறை பாராளுமன்ற செயலாளராக இருந்தவர். இவ்வாறாக ட்ரூடோ அமைச்சர்களின் பொறுப்புக்களிலும் மேலும் பல சீரமைப்புக்களையும் செய்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top