மஹிந்தவுக்குப் பணம் வழங்கப்பட்டதை ஒப்புக் கொண்டார் மகிந்தானந்த!

அரசாங்கத்திற்கு கோத்தபாய ராஜபக்ச பயம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்னாள் ஜனாதிபதி குறித்து நியுயோர்க் டைம்ஸ் பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆனால் மஹிந்த ராஜபக் ஷ மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது. நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது. இந்த குற்றங்களுக்கு வழக்கு தொடர முடியாது. வெறுமனே விமர்சனம் மட்டுமே முன்வைக்க முடியும். மஹிந்த ராஜபக் ஷவிற்கு மட்டும் அல்ல பல நிறுவனங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பணம் கொடுத்துள்ளது. அவற்றை மறைக்க வேண்டாம்.
இன்று அரசாங்கத்துக்கு கோத்தாபய பயம் ஏற்பட்டுள்ளது. யுத்தத்தை வெற்றிகொண்ட எமது தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறு பிள்ளைகளுக்கு அச்சங்கொள்ளப் போவதில்லை. எமது தலைவர்களை சிறையில் அடைத்து உங்களில் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது. எனவும் அவர் குறிப்பிட்டார்.