மஹிந்தவை முடக்க சூழ்ச்சி!

எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் அமைவதை தடுப்பதற்கே அமெரிக்கா சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதி வழங்கவில்லை என சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதனை தவிர்ப்பதற்கே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இவ்வாறான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு சேறு பூசும் வகையில் ‘நியூயேர்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியாகியுள்ளதாகவும் அந்த அணியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.