மஹிந்த விடுத்துள்ள பகிரங்க சவால்..

சமகால அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். நியூயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பில் தன்னிடம் கேட்பதற்கு முதல், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வந்து காண்பிக்குமாறு மஹிந்த சவால் விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்திடம் சரியான நடைமுறைகள் எதுவுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார செலவுகளுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.