மஹேந்திரனை அழைத்து வந்தால் நானும் விளக்கமளிப்பேன்! – அடம்பிடிக்கும் மஹிந்த.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சுத்திரதாரி அர்ஜுன மஹேந்திரனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தால், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான, குற்றச்சாட்டுக்கு தான் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பிரசாரங்களுக்காக சீனா நிதியுதவி வழங்கியது என்று நியூயோர்க் டைம்ஸ் குற்றம்சாட்டிருந்தது. எனினும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பதிலளிக்காமல் மஹிந்த ராஜபக்ச நழுவி வருகிறார்.