Canada

மிசிசாகாவில் இரண்டு சிறுமிகளை காணவில்லை தகவல் கோரும் போலீசார்.

பீல் பிராந்திய பொலிசார் இரண்டு இளம் பெண்களை தேடுகின்றனர். இருவரும் நகர் புறத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருக்கலாம் என நம்பபடுகின்றது. சொமய்கா சிமித் 12-வயது மற்றும் ரியானா ஷோ 13-வயது ஆகிய இரு பெண்களும் மிசிசாகாவை சேர்ந்தவர்கள் எனவும் இருவரும் ஒன்றாக சேர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. மிசிசாகா கீ கோட் பகுதியில் கடைசியாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 8.30மணியளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொமய்கா சிமித் 5.4-உயரம், கறுப்பு நிறம், மெல்லிய உடம்பு மற்றும் சிவப்பு முடி கொண்ட ஜடை போட்டிருந்தார். இளம் சிவப்பு மேற் சட்டையும் அதே நிற இறுக்கமான காற்சட்டையும் அணிந்திருந்தார். ரியானா ஷோ கறுப்பு நிறம், 5.5அடி உயரம், மெல்லிய தோற்றம் கொண்டவர். குதிரைவால் போட்ட கறுப்பு முடி. கடைசியாக காணப்பட்ட போது வெள்ளை நிற மேற் சட்டையும் கறுப்பு கட்டை காற்சட்டையும் அணிந்திருந்தார். இவர்கள் இருவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் பீல் பிராந்திய பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top