News

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு 27 பேர் பலி!

மியான்மர் மணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலியாகினர். மியான்மரில் மாணிக்கக் கல், தங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்களை வெட்டி எடுப்பதற்காக பல சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சுரங்கங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பலர் பலியாவது அடிக்கடி நடக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு, நவம்பரில் கச்சின் மாவட்ட சுரங்கத்தில் நடந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், இந்த மாவட்டத்தில் செட்மூ பகுதியில் உள்ள மாணிக்கக் கல் சுரங்கத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 27 பேர் பலியானதாக சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Latest News

To Top