News

முதலமைச்சரின் தான்தோன்றித்தனமான முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது! – டெனீஸ்வரன்.

எனது முயற்சி அநீதிக்கெதிரானது. முதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எனது மக்கள் சேவையை தொடர மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன். மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவர்-

கடந்த காலங்களில் இன, மத பேதங்களை மறந்து சேவை செய்தவன் நான்.இதனை சகலரும் அறிவர். எதிர்வரும் 9 ஆம் திகதி ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது கட்டளை ஒன்றை பிறப்பிக்கும். என்னை மீண்டும் பதவியிலமர்த்த வேண்டும் என்பதே அது. அத்துடன் எனது அமைச்சை தற்போது வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது. எனக்கு இந்த நல்லாட்சியில் நீதி கிடைத்துள்ளதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன்” என்றார்.

அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பீர்களா? என ஊடகவியலாளர்கள் கேட்ட போது,

“பதவியேற்ற பின்னர் அதனை தொடர்வதைத் தவிர வேறு என்ன செய்வது? முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கைத் தொடர்ந்தேன். இது மாத்திரமன்றி பழைய அமைச்சு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்துவிட்டு எனது பழைய அமைச்சை தாருங்கள். மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளன” என்றும் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top