News

மைத்திரியை பதவியில் இருந்து நீக்க சூழ்ச்சி!

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கும் சூழ்ச்சிகரமான வேலைத்திட்டம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் விருப்பத்திற்கு அமைய அதனை செய்ய முடியும் என்ற வகையிலான பந்தி அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆறு மாதங்களாக வருகை தராத குழுவின் உறுப்பினர் ஒருவரது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளது எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியை அடுத்து நடந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசும் போதே குணவர்தன இதனை கூறியுள்ளார்.

தயாசிறி ஜயசேகர, அரசியலமைப்புச் சட்ட வரைவை, ஜயம்பதி விக்ரமரத்ன, சுமந்திரன், சுரேன் பெர்னாண்டோ ஆகிய மூன்று பேரே தயாரித்துள்ளனர். இந்த வரைவில் புத்திஜீவிகள் குழு கையெழுத்திடவில்லை. சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து ஜனாதிபதியை நீக்க முடியும் என்ற பந்தி சேர்க்கப்பட்டுள்ளது. முழு நாடாளுமன்றமும் இணைந்து தயாரிக்க வேண்டிய அரசியலமைப்புச் சட்டத்தை இரண்டு பேர் இணைந்து எப்படி உருவாக்க முடியும். தமது அரசியல் திட்டங்களை நிறைவேற்ற உருவாக்கப்படும் அரசியலமைப்புச்சட்ட உருவாக்கத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top