யாழிலுள்ள விஜயகலா எம்.பி வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் ..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா வீட்டிற்கு பொலிஸார் சென்று விசாரணை நடத்தியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அங்கு சென்று அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு நேற்று மாலை பொலிஸார் சென்றுள்ளனர்.
விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் அவசியம் என விஜயகலா அண்மையில் தெரிவித்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற்றுகொள்வதற்காகவே பொலிஸார் வீட்டிற்கு சென்றுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
விஜயகலா மகேஸ்வரன் யாழில் தெரிவித்திருந்த கருத்து தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுதியிருந்த நிலையில், அவர் தனது ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். கடந்த 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற போதும், தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் தற்போதும் பெரிய விடயமாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.