யாழில் மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு! பலத்த பொலிஸ் பாதுகாப்பு ..

யாழ். செம்மணி வீதியில் புதிதாக மனித எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த பகுதியில் நீர் தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று அந்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, அந்த பகுதியில் எலும்புக் கூடுகள் காணப்பட்டதையடுத்து அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், நாளை யாழ். நீதிமன்றின் அனுமதியுடன், எலும்புக் கூடுகளை மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.